ஆய்வுச் சிந்தனைகள்


மரபியல்

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இறுதி இயலாக அமையும் மரபியல் கூறும் செய்திகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

மரபியல் உணர்த்தும் செய்திகள்

மரபியல் சூத்திரங்களை இளம்பூரணர் 112 ஆகவும், பேராசிரியர் 110 ஆகவும் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தாமே ஆறறிவுயிரே (1532) எனத் தொடங்கும் நூற்பாவையடுத்து ஒருசார் விலங்கும் உளவெளன மொழிப என்ற நூற்பா இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. இந்நூற்பாவுடன் ஒத்த கருத்துடைய நூற்பா போராசிரியர் உரையில் காணப்படவில்லை.

நூற்பாவின் அடிகளைப் பிரித்தும் சேர்த்தும் பொருள் கொள்வதனால் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறதே ஒழியப் புது றூற்பாக்கள் உரைகளில் கிடையாது.

தொல்காப்பியர் தம் காலத்தில் வழங்கிய உயிரினங்களின் பெயர்களை நூல் முழுவது கூறியிருந்தாலும், சிறப்பாக மரபியலில் விளக்குகிறார்.

அவர் மரபியலில் உயிரினங்களின் பெயர்களைப் பின்வருமாறு.

அ.இளமைப் பெயர்
ஆ.ஆண்பாற் பெயர்
இ.பெண்பாற் பெயர்
ஈ.அறுவகை உயிர்ப்பாகுபாடு என பிரித்து விளக்குகிறார்.

அவர் மேற்கூரிய நான்கிற்கும் முதலில் தொகையைக்கூறி பிறகு விரித்து உரைக்கின்றார்.

அ.இளமைப்பெயர்
இளமை பெயர்களின் தொகை

தொல்காப்பியர் ஒன்பது இளமைப்பெயர்களின் தொகையை,

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவு மறியுமென்
றென்பதும் குழவியோ டிளமைப் பெயரே
(1) என்றுக் குறிப்பிடுகின்றார்.

இளமைப் பெயர்களை விரித்து உரைக்கையில்
பார்ப்புப் பிள்ளையும் பறப்பவற்று இளமை
(3)
என்றும், இவை மக்களில் இளமைத் தன்மையுடையவற்றிற்கு வழங்குகின்றன.

மூங்கா வெருகு எலிமூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய
என்பதும்

நாயே பன்றி புலி முயல் நான்கும்
ஆயுங் காலை குருளை என்ப
(8)
நரியும் அற்றே நாடினர் கொளினே

மேற்கூரிய ஐந்து விலங்குகளின் மூலம் குருளையைக் குட்டி என்று பறழ் என்றும் சொல்லலாம். ஆனால், பறழ் என்னும் வழக்கு இக்காலத்தில் காணப்படவில்லை.

நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றும் கூறலாம். இக்காலத்தில் இவை இப்பெயரால் வழங்கப்படாமையும் நோக்குதற்குரியது.

ஓரறிவுயிர்களுக்குரிய இளமைப் பெயர்களைப் பிள்ளை, குழவி, கன்று, போத்து ஆகியவை வழங்கப்பெறும்.

ஓரறிவுயிரென்பது

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே (1524)
நெல், புல் ஒழிந்த ஏனையவற்றையேயாகும்.

மேற்கூறிய இளமைப் பெயர்களின் மரபின்படி வழங்கப்படுபவை. அவையன்றி வேறு இளமைப் பெயர்கள் கிடையாது என்பது தொல்காப்பியர் கருத்து போலும்.

ஆ.ஆண்பாற் பெயர்

தொல்காப்பியர் 35 முதல் 51 வரையுள்ள நூற்பாக்களில் ஆண்மைப் பண்பு பற்றிய பெயர்களை இவையிவை இன்னினவற்றுக்கு உரியன என்று விரித்துரைக்கின்றார்.

அவை

எருதும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யரத்த ஆண்பாற் பெயரென மொழிப
(546) என்பனவாம்.

களிறு: யானையின் ஆண்பால் களிறு எனப்படும். அப்பெயர் பன்றிக்கும் வழங்கப்படுதல் உண்டு ஆனால் பன்றியை இக்காலத்தில் களிறு என வழங்கும் மரபு காணப்படுவதில்லை.

இச்செய்தினை

வேழக் குறித்தே விதந்து களிறு என்றல் (34)
என்றும் கேழல் கண்ணும் கடிவரை இன்றே
(35)
இந்நூற்பாவினால் கண்டு உணரலாம்.

ஒருத்தல்: புல்வாய், புலி, உழை, மரை, கவர, காரம், யானை, பன்றி எருமை என்பனவற்றில் ஆண்பால் ஒருத்தல் என்னும் பெயர் பெறும்.

ஏறு: பன்றி புல்வாய் உழையே கவரி
என்று இவை நான்கும் ஏறு எனற்கு ரிய
(39)
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன (40)
கடல்வாழ் சுறாவும் ஏறு எனப்படுமே (41)

போத்து: மாடு, எருமை, புலி, மரைமான், புல்வாய், மான் இவற்றின் ஆணினத்தைப் போத்து என்பர்.

இ.பெண்பாற்பெயர்

பெண்மைப் பண்பு பற்றிய பெயர்களை தொகையாக
பேட்டையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே
(547)

என விரித்துக் கூறுவர். இம்மரபு பற்றி புறனடையாக 69, 70 ஆம் நூற்பாக்களிலும் எடுத்துரைப்பர்.

பிடி: பெண் யானையைப் பிடி என்றுக் கூறுவர்.
இதனைப் பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே (52) என்பர்.

பேடை, பெடை : பேடை, பெடை என்பனவும் பறவையினதிற்குரிய பெண்பாற் பெயர்கள்.

அளகு: என்னும் பெண்மைப் பெயர்கள், கோழி, கூகை என்ற இவ்விரண்டிற்கல்லது. ஏனையவற்றுக்கும் ஏலாத ஒன்றாம். இப்பெயர் ஒரே வழி மயிலுக்குரியதாம்.

கோழி கூகை ஆ இரண்டு அல்லவை சூழும் காலை அளகு எனல் அமையா (56) என்றும், அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே (57) என்பதாம்.

பிணை:என்னும் பெண்மைப் பெயர்க்குரியன. புல்வாய், ஒவ்வி, உழை, கவரி என்னும் நான்குமாம். பிணவு, பிணவல் என்னும் பெண்மைப் பெயர்கள் பன்றி, புல்வாய், நாய் என்பவற்றுக்கும் உரியன.

ஈ.அறுவகை உயிர்ப்பாகுபாடு: இளமைப்பெயரில் உயிர்பாகுபாடுப் பற்றி கூறுகையில், ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடு அதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாக 8 நூற்பாக்களில் வகைப்படுத்திக் கூறியுள்ளார்.

நிறைவுரை: மரபியலில் மரபு என்ற சொல்லுக்கு விளக்கம் கண்டதுடன், மரபியல் உணர்த்தும் செய்திகளாகிய உயிரினங்களின் பாகுபாட்டையும். தொல்காப்பியர் காலத்து நால்வகை மக்கள் பாகுபாட்டையும், மரபியலின் நிறைவாக நூலின் அமைப்பையும் சிறிது வகுத்து இக்கட்டுரைக்கண் காண்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link