ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியமரபு

தொல்காப்பியம் - தமிழ் ஐந்திலக்கணம்:

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தின் இலக்கணமும் இதில் கூறப்பட்டுள்ளன. அவை சூத்திரம் - நூற்பா.

தொல்காப்பியரே என்மனார் புலவர், என்று கூறியுள்ளார்கள் 2500 - ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இலக்கியங்கள் பல இருந்தன. பெரும்பகுதி தீயினாலும், நீரினாலும் பாதுகாப்பற்ற நிலையில் அழிந்தன. மீந்தவை - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினென் கீழ்கணக்கு நீதி நூல்கள், ஐம்பெருங்காப்பியங்களும் சங்கம் சார்ந்தவைகளாகும்.

மதுரை தமிழ்ச் சங்கம் தோன்றிய இடம் நிலந்தருதிருவில் பாண்டியன் முதலியோர் 49 - புலவர்களைத் தேர்ந்தெடுத்து சங்கம் வளர்த்தனர். பங்குகள் கூடியே வாழும். அதைப் போன்று புலவர்களும் சார்ந்தே வாழ்ந்தார்கள்.

வயலுக்கு வரப்பு போல இலக்கியங்களுக்கு இலக்கணம் இன்றியமையாதது. தமிழ் மொழி வடவேங்கடம் முதல் குமரிவரை வழக்கில் இருந்தது. தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவு 27-சிறு பிரிவு.

மரபு - என்பது வழிவழியாக வருவது. இளமைப் பெயர் - பாப்பு, பறழ், குட்டி, கன்று, பிள்ளை, மகவு, அப்பர், போத்து, கண்டி, கடுவன், மறி, குழவி, ஆண் - ஏறு, ஒற்றை ஒருத்தல் களிறு, சேவு, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதன்.

பெண்: பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிளவு, பிடி, பறப்பன, தவழ்வன, ஊர்வன, அன்றே இருந்தன. மகன், மகள், மக்கள் - உயர்திணை, புல், பூண்டு, செடி, புதர், கொடி, மரம், தலைப்பூ, நீர்ப்பூ, செடிப்பூ, மரப்பூ, வீ - மலர்

1. ஓரறிவுயிர் உடம்பால் அறிவன - மரம் 2. உடம்பு, நாவால் அறிவன - நத்தை, மீன் 3. உடம்பு, நா, மூக்கால், அறிவன - கரையான், எறும்பு, வண்டு, தும்பி. 4. உடம்பு, நா, மூக்கு, கண்ணால் அறிவன - பாம்பு (கட்செவி) 5. உடம்பு, நா, மூக்கு, கண், காது இவைகளால் அறிவன - ஐந்தறிவுயிர் - ஆடு, மாடு. 6. ஐந்து புலன்களுடன் மனமும் சேர்ந்து அறிவது மனிதன் - மக்கள், ஆண், பெண், பொது.

1525:ஒன்று அறிவதுவே உற்றறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
புறக் காழனவே புல்என மொழிப
அகக் காழனவே மாம் என மொழிப

உள்ளே வைரம் இருக்கும் தேக்கு, பூவரசு மரம் எனப்படும். வெளியே வைரம் இருக்கும் மூங்கில், தென்னை, பனை முதலியன புல் எனப்படும்.

தோற்றம்:

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவு இல் சொல்லோடு தழா அல் வேண்டும்.

மரபின் முதன்மை:

மாபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபு வழிப்பட்ட சொல்லினான

வரலாறு முறைமைகளில் இருந்து திரித்துக் கூறுதல் செய்யுளில் இல்லை மரபு வழிப்பட்ட சொற்களால் செய்யுளில் சொல்லுதல் வேண்டும்.

வழக்கு என்பது உயர்ந்தோர் வழங்கும் வழக்கே வழக்காகும்.

முதல்நூல்:

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்
செய்வினைப் பயனை அடையாத
மெய்யறிவுடைய சான்றோர்

அவர் கூறியதே முதல் நூலாகும்.

வழிநூல்:

வழி எனப்படுவது அதன் வழித்தாகும். வழி நூல் நான்கு வகைப்படும்.

1.தொகுத்தல் 2.விரித்தல் 3.தொகை விரி 4.மொழிபெயர்ப்பு நூலில் குற்றம் இருக்கக்கூடாது கூறியது கூறல், முன்பு கூறியதற்கு முரணாக பின்பு கூறல், முழுவதும் கூறாமல் குறைவாகக் கூறல், தேவைக்கு அதிகமாக மிகைப்படுத்திக் கூறல் பொருளற்று கூறல், மயக்கம்படி கூறல், இனிமையற்றன கூறல், பெரியோர் பழித்த சொல்லைக்கூறல், கொச்சைப் பேச்சு, கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத வகையில் கூறுதல் கூடாது.

நன்றாக அமைய வேண்டுமென்றால் சில நல்ல உத்திகளைக் கையாள வேண்டும். தெளிவாகக் கூறல், தலைப்பு இடுதல், தொகுத்துக்கூறுதல், மெய்யை நிலை நாட்டல், கூறியனவற்றைக் கொண்டு கூறாதவற்றை வெளிப்பட வைத்தல் பிறர் கூறுவனவற்றை ஏற்றல்.

சுருக்கமாக ஆனால் விளக்கமாக கருத்தை உய்த்து உணரும்படி கூறல் வேண்டும்.

1. திணை இரண்டு - உயர்திணை, அஃறிணை 2. பால் ஐந்து - உயர் 3. அல் - 2 3. காற்று நான்கு - தென்றல், வாடை, கோடை, கொண்டல 4. பருவம் -ஆறு 5. திசை - எட்டு இவ்வாறு மரபு போற்றுவதால் சொல்லும் பொருளின் அழகும் பொருளும் கேட்பவருக்கு இனிதாக விளங்கும் இன்பம் தரும்.

நன்றி: தொல்காப்பியம்பொருளும்வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link