முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » ஹலோ நான் பேய் பேசுறேன்

Hello Naan Pei Pesuren Movie Review

ஹலோ நான் பேய் பேசுறேன்

-

Hello Naan Pei Pesuren

Tamil Movie - Hello Naan Pei Pesuren Review - Vaibhav,  Tamil Movie Actor, Actress
சின்னச்சின்னதாக திருட்டு செய்து ஜாலியாக வாழ்பவர், வைபவ். ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்த ஓவியாவின் செல்போனை திருடிக்கொண்டு வந்து வீட்டில் வைக்கிறார். அந்த செல்போனில் இருந்து பேய் (ஓவியா) கிளம்புகிறது. இறந்த ஓவியாவின் ஆவி செல்போனில் புகுந்துகொண்டு, வைபவ் மற்றும் அவரது மாமனார் வி.டி.வி கணேசை பயமுறுத்தி வருகிறது. பிறகு வைபவ்வின் காதலி ஐஸ்வர்யா ராஜேஷைப் பிடித்து வைத்துக்கொண்டு, தன் காதலன் கருணாகரனைக் கொண்டு வந்து நிறுத்தினால் விட்டுவிடுவதாக மிரட்டுகிறது.  அதன் கோரிக்கையை நிறைவேற்றி ஐஸ்வர்யாவை மீட்க முடிந்ததா என்பதே மீதி கதை.

நகைச்சுவை, திகில் இரண்டையும் சரியான அளவில் கலந்து தர முயற் சித்திருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை - திகில் படங்களில் லாஜிக் பற்றிய கவ னத்தைவிட பார்வையாளர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது என்பதையே மனதில் கொண்டு திரைக்கதை அமைத் திருப்பார்கள். அறிமுக இயக்குநர் எஸ்.பாஸ்கரும் இந்தப் பாதுகாப் பான எல்லைக்குள்ளேயே விளையாடி இருக்கிறார். திருடனின் காதல், சிரிக்கவைக்கும் வசனங்கள், துல்லியமான சென்னை வட்டார வழக்கு, பார்வையாளர்களையும் ஆடவைக்கும் சாவுக் குத்தின் வகை கள், அழகான பேய், பேயின் நிறைவேறாத ஆசை, பேய்க்கு இரக்கம் காட்டுவது என வெகுஜன ரசனைக்கான சமாச்சாரங்களைத் தூக்கலான நகைச்சுவையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும் நிரம்பி வழியும் நகைச்சுவையால் அரங்கம் அதிர்கிறது.

வேடம் எதுவாக இருந்தாலும், தனது பர்பாமன்ஸில் பின்னி பெடலெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, பெரிய அளவில் பெடலெடுக்கும் வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை திருப்திகரமாக செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அழகியாகவும், சில காட்சிகளில் ஆவியாகவும் வரும் ஓவியாவும் மிரட்டுகிறார்.

ஐஸ்வர்யா, ஓவியா என்று ஆவியும், நாயகியும் ஒரு பக்கம் இருந்தாலும், வைபவின் மச்சான்ஸ்களாக வரும் வி.டி.கணேஷ், சிங்கபூர் தீபன் ஆகியோரது காமெடி காட்சிகள் படத்திற்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. அதிலும், வி.டி.வி.கணேஷின் அந்த பூஸ்ட் கலக்கும் வித்தைக்கே, பல குடிமகன்கள் அமையாகிவிடுவார்கள்.

நகைச்சுவை நடிப்பில் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதை வைபவ் நிரூபித்திருக்கிறார். சென்னை வட்டார வழக்கைக் கச்சிதமாகப் பேசி நடித் திருக்கும் விடிவி கணேஷ் வரும் காட்சியெல்லாம் கலகலப்பு. 

பேயின் ப்ளாஷ்பேக்கைச் சுருக்கமாக ஒரு நகைச்சுவைப் பாடல் வழியாகச் சொன்ன விதம் அழகு. பேயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே எனத் துணியும் மதுமிதாவின் முடிவு, அப்ளாஸ் அள்ளுகிறது. பேயை வைத்துப் பயமுறுத்துவதை விட அது விருந்தாளியாக வந்துபோகும் கதையில் ரசிகர்களைச் சிரிக்கவைப்பதே முக்கியம் என்ற நோக்கத்தில் வெற்றிபெற்றுவிடுகிறார் இயக்குநர். கேள்வி கேட்காமல் பயந்து, சிரித்துவிட்டு வரலாம்.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை, நமக்கு திகில் படம் பார்க்கும் அனுபவத்தையே கொடுக்காமல், ஏதோ ஒரு காமெடி காதல் கதையை பார்ப்பது போலவே திரைக்கதையை நகர்த்திச் செல்லும்  இயக்குநர் பாஸ்கர், இடைவேளையின் போது ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுக்கிறார்.
நடிப்பு: வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு.
இயக்கம்: எஸ்.பாஸ்கர்
தயாரிப்பு: அவ்னி மூவிஸ்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: என்.பானுமுருகன்
Your Ad Here
Site Meter