முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் »

I Movie Review

-

I

Tamil Movie - I Review - Santhanam, Suresh Gopi, Vikram, Amy Jackson, P.C. Sriram, Shankar,  Tamil Movie Actor, Actress
உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை தந்திரமாக ஒரு கும்பல் உருக்குலைக்கிறது. உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை தந்திரமாக ஒரு கும்பல் உருக்குலைக்கிறது. அவன் மனவலிமையோடு மீண்டு வந்து பழி வாங்கும் கதை.

ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன் (விக்ரம்), மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான தியா (எமி ஜாக்சன்) மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார்.

இந்நிலையில், ஆணழகன் போட்டியில் வென்று உள்ளூர் மாடலிங் உலகில் நுழையும் விக்ரமுக்கு எமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எமி ஒரு நெருக்கடியில் சிக்கிக்கொள்ள, அதற் காக உதவும் விக்ரம் விரைவில் சிறந்த மாடலாக உருவெடுக்கிறார். விக்ரம் – எமி விளம்பர ஜோடி பெரும் புகழ் பெறுகிறது. வணிக உலகின் சூதாட்டத்தில் விக்ரம் பகடைக்காயாக உருட்டப்பட, அவர் வாழ்க்கை சின்னா பின்னமாகிறது. தன்னைச் சீரழித்துத் தன் காதலைப் பறித்தவர்களை விக்ரம் பழிவாங்குவதும், காதலனை அடையாளம் காண முடியாத காதலி என்ன செய்தாள் என்பதும்தான் மீதிக் கதை.

விக்ரமின் மிரட்டல் நடிப்பு: விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா? என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

நாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

மாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது.

சந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார்.

இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.

மற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.
இயக்குனர்: சங்கர்
தயாரிப்பாளர்: வேணு ரவிச்சந்திரன்
கதை: சுபா
நடிப்பு: விக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேன்
இசையமைப்பு : ஏ. ஆர். ரகுமான்
Your Ad Here
Site Meter