(11 Mar 2010)பட்டாளம் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்காத நதியா, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரியாக சேரன் நடிக்கும் அப்படத்துக்கு யுத்தம் செய் தலைப்பு தேர்வாகியுள்ளது. முக்கிய வேடத்தில் நாசர், நதியா நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் சத்யா ஒளிப்பதிவு செய்ய, கே என்பவர் இசையமைக்கிறார். புது கதாநாயகி அறிமுகமாகிறார். அவருக்கு புதுப்பெயர் வைத்த பிறகே மீடியாவுக்கு அறிமுகப்படுத்துவாராம் மிஷ்கின். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
(11 Mar 2010)த்ரிஷா 1999-ல் திரையுலகுக்கு வந்தார். இதுவரை தமிழ், தெலுங்கில் 35 படங்களில் நடித்து விட்டார். தெலுங்கு பட உலகில் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சாமி, கில்லி, ஆதி, திருப்பாச்சி, அபியும் நானும் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கட்டா மிட்டா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். மேலும் 3 இந்திப் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து மும்பையில் செட்டில் ஆகும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. த்ரிஷா வீடு ஆரம்பத்தில் புரசைவாக்கத்தில் இருந்தது. இப்போது அடையாறு பார்க் ஓட்டல் அருகில் உள்ள புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார். அங்கிருந்து மும்பைக்கு நிரந்தரமாக குடி பெயரப்போவதாகவும், இதற்காக அங்கு வீடு பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது, மறுத்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் வீடு தேடுகிறேன் என்றார். மும்பையில் 3 பங்களா வீடுகள் விலைக்கு வந்துள்ளதாம். அவற்றை விலை பேசி வருகிறார். வீடுகளை வாங்கி வாடகைக்கு விட முடிவு செய்துள்ளாராம்.
(11 Mar 2010)தனக்கு ஜோடியாக தமன்னாவைத்தான் போட வேண்டும் என்று நடிகர் கார்த்தி அடம் பிடித்து, அதில் சாதித்தும் விட்டார். பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகனாக திகழும் கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒப்பந்தமானார். ஜவ்வாக இழுத்துகொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒருவழியாக வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடா விட்டாலும், கார்த்தியின் புகழுக்கு ஒன்றும் குறைவில்லை. அதனைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா விரைவில் வெளியாகிறது. பையாவைப் பொறுத்தவரை கண்டிப்பாக வெற்றிப்படம் என்கிற நிலை உருவாகி விட்டது. இதற்கு காரணம் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி பையாவை வாங்கியிருப்பதுதான். பெரிய இடத்து பிள்ளையின் படம் என்பதால் திருட்டு விசிடிக்காரர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சரி... விஷயத்துக்கு வருவோம். பையாவைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள படம் சிறுத்தை. நடிகர் பாலாவின் சகோதரரும், பிரபல ஒளிப்பதிவாளருமான சிவா தெலுங்கில் இயக்கிய விக்கிரமார்குடு என்ற வெற்றிப் படத்தின் ரீ-மேக்தான் சிறுத்தை. படத்தின் நாயகியாக நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகிய இயக்குனர் அனுஷ்காவிடம் சம்மதம் வாங்கி விட்ட நிலையில், தமன்னாதான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கார்த்தி அடம் பிடித்திருக்கிறார். இதையடுத்து தமன்னாவிடம் கதை சொல்லியிருக்கிறார் சிவா. தமன்னாவும், கார்த்தி ஜோடியாக நடிக்க டபுள் ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
(11 Mar 2010)பிரபல சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஞ்சிதா - நித்தியானந்தருக்கு ஆதரவான கருத்தை நடிகை சோனா தெரிவித்துள்ளார். யுனிக் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை தயாரித்து வரும் சோனா, இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது புதிய படம் குறித்து பேசிய சோனாவிடம், நடிகை ரஞ்சிதா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சோனா, என்னை பொறுத்த வரைக்கும் அவர்கள் செய்ததில் குற்றம் இல்லை. அவர்கள் இருவரும் விருப்பப்பட்டுத்தானே அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விருப்பம் பற்றி நான் வேறு கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை, என்று கூறினார். சினிமாவில் பெண்களை அடிமைகளாக நினைக்கிறார்கள் என்று கூறிய சோனா, அந்த அடிமைத்தனத்தை மாற்றிக் காட்டுவதற்காகவும், எங்களாலும் ஆட்சி பண்ண முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும் படத் தயாரிப்பில் இறங்கியிருப்பதாக கூறினார். திருமணம் பற்றிய கேள்விக்கு, நான் ஆண்களை நம்ப மாட்டேன். எல்லோருமே சுயநலவாதிகள். நான் ஒளிவு மறைவு இல்லாதவள். திறந்த மனதுடன் பேசுபவள். என்னை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். யாராவது என்னிடம் வந்து, நீங்க அழகா இருக்கீங்க என்று வழிந்தால், நான் கண்டுகொள்வதில்லை என்று கூறுகிறார்.
(11 Mar 2010)மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். இரு பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ராவண் படத்துக்குப் போய்விட்டார் ஐஸ். அவர் இடம்பெறாத முக்கியமான காட்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் எடுத்தனர். ராவண் படம் பிரச்சினைக்குள்ளான நேரத்தில் அந்தக் கால்ஷீட்டை எந்திரனுக்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளமாக ரூ 6 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளனர் இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யாராய்க்கு. இன்னும் ஒரு பாடல் காட்சி மற்றும் ரஜினி -ஐஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.
ஜூலையில் எந்திரன் படம் வெளியாகும் என ரஜினி கூறினார். ஆனால் ஐஸ்வர்யாவின் திடீர் கால்ஷீட் குளறுபடியால் திட்டமிட்டபடி படம் வருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. இந்த முறையும் மணிரத்னத்தின் ராவண் படம்தான் காரணம். இப்போதைக்கு அவரும் படிப்பிடிப்பை முடிப்பதாகத் தெரியவில்லை. ரஞ்சிதாவும் இந்த படத்தில் நடிப்பதால் அவரது பிரச்சினை வேறு அந்தப் படத்தை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யாவுக்காக இப்போது எந்திரன் படக்குழுவினர் காத்துக் கொண்டுள்ளது. அவர் எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்போதுதான் படப்பிடிப்பை துவங்க வேண்டிய நிலை. இதற்கிடையே, ராவண் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இனி எந்திரன் படிப்பிடிப்புக்கு வந்துவிடுவேன் என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளாராம். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இது இறுதிக்கட்டப் படப்பிடிப்பாம். எந்திரனை 3 டியில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதால் 3 டி உருவாக்கம் சாத்தியமா என்பது தெரியவில்லை. படம் ஜூலையில் வெளியாகுமா அல்லது தீபாவளி வெளியீடா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்காவது படம் வெளிவருமா?









