முதல் பக்கம் » சினிமா » செய்திகள்

Tamil Cinema Latest News

11 Apr 2016
Jeeva and Nayanthara's Thirunal gets UA certificate

போக்கிரி ராஜா படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜீவாவின் புதிய படம் திருநாள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கியுள்ள படம் இது.

நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள திருநாள் படம் முடிந்த நிலையில், படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  படம் இப்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.  சென்சார் சான்றிதழ் பெற்றதால் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி, ஆக்‌ஷன், காதல் கலந்த கதையாக திருநாள் படம்.

08 Apr 2016
Nadigar Sangam - Cricket 2016

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் பங்கேற்கிறார்கள். 

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். 8 கதாநாயகிகள் விளம்பரதூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 நடிகர்- நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

விளையாட்டைக் காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.500, ரூ.1000, ரூ,2000, ரூ.5000 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. டிக்கெட் கட்டணம் மற்றும் சேட்டிலைட் உரிமை மூலம் நடிகர் சங்கத்துக்கு ரூ.13 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.  இந்த அணிகளின் விபரம் பின்வருமாறு :

 • சென்னை சிங்கம்ஸ்
  • சூர்யா
  • விக்ராந்த்
  • சிவா
  • உதய்
  • நந்தா
  • அருண்விஜய்
  • அர்ஜுன்
  • ஹன்சிகா
  • கீர்த்தி சாவ்லா
  • கவுரி முன்சால்
  • ருக்மணி
  • திவ்யா
 • மதுரை காளைஸ்
  • விஷால்
  • ரிஷி
  • சூரி
  • அருள்நிதி
  • ரமணா
  • ஆர்.கே.சுரேஷ்
  • மன்சூர் அலிகான்
  • வரலட்சுமி
  • ஜனனி ஐயர்
  • மதுமிதா
  • சாந்தினி
  • நிக்கி கல்ராணி
 • கோவை கிங்ஸ்
  • கார்த்தி
  • பரத்
  • விஷ்ணு
  • சஞ்சய்
  • மகேந்திரன்
  • ஜே.கே.ரித்திஷ்
  • பிரசாந்த்
  • தமன்னா
  • மது ஷாலினி
  • சிருஷ்டி டாங்கே
  • மும்தாஜ்
  • மிஷா
  • அபிநயஸ்ரீ
 • நெல்லை டிராகன்ஸ்
  • ஜெயம் ரவி
  • அரவிந்த்சாமி
  • விஜய் வசந்த்
  • சவுந்தர்ராஜா
  • பிருத்வி
  • அஸ்வின் சேகர்
  • சிபி
  • வைபவ்
  • ஸ்ரீதிவ்யா
  • நமிதா
  • மனீஷா யாதவ்
  • விஜயலட்சுமி
  • கோமல் சர்மா
  • பார்வதி நாயர்
 • ராம்நாட் ரைனோஸ்
  • விஜய் சேதுபதி
  • ஜெய்
  • கலை
  • போஸ் வெங்கட்
  • வருண் ஐசரி கணேஷ்
  • சக்தி
  • சிரீஷ்
  • அருண்பாலாஜி
  • ரம்யா நம்பீசன்
  • சோனியா அகர்வால்
  • வசுந்த்ரா
  • காயத்ரி
  • ரித்விகா
 • தஞ்சை வாரியர்ஸ்
  • ஜீவா
  • சரண்
  • பசுபதி
  • அதர்வா
  • அசோக்
  • பிளாக் பாண்டி
  • அமலா பால்
  • தன்ஷிகா
  • புளோரா சைனி
  • நிகிஷா படேல்
  • சஞ்சனா சிங்
 • சேலம் சீட்டாஸ்
  • ஆர்யா
  • கார்த்திக்
  • ஆதவ்
  • உதயநிதி
  • உதயா
  • ஜித்தன்
  • ரமேஷ்
  • செந்தில்
  • பிந்து மாதவி
  • நந்திதா
  • பூனம் கவுர்
  • ரகசியா
  • சுஜா வாரூனி
 • திருச்சி டைகர்ஸ்
  • சிவகார்த்திகேயன்
  • ஷாம்
  • விக்ரம் பிரபு
  • அசோக் ஷெல்வன்
  • ஹேமச்சந்திரன்
  • நிதின் சத்யா
  • சதீஷ்
  • ஸ்ரீமன்
  • கீர்த்தி சுரேஷ்
  • சாயாசிங்
  • காயத்ரி ரகுராம்
  • தேஜாஸ்ரீ
  • வேதிகா

08 Apr 2016
Tamil comedian actor Vadivelu returns - Joins hands with Vishal

சுராஜ் இயக்கி  விஷால் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு காமெடி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு 'கத்தி சண்டை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'திமிரு' படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த வடிவேலு, இப்படத்தின் மூலம் இரண்டாம் முறையாக இணைகிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இதற்கு காரணம் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் தான். அப்போது திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரம் செய்து வந்தார்.  குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.  ஆனால், திமுக தோல்வியடைந்து, அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது.

சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம், மருதமலை ஆகிய படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை பிரபலமானவை. அதேபோல், சுராஜ், விஷால் கூட்டணியில் மீண்டும் நகைச்சுவையில் கலக்க களம் இறங்குகிறார் வடிவேலு.

08 Apr 2016
The Jungle Book releases with U/A certification

வால்ட் டிஸ்னி தயாரிப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் நீள் சேத்தி நடிப்பில்,சிறு வயதில் நாம் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக ரசித்த தி ஜங்கிள் புக் கதையை, அதிநவீன சிஜி லைவ் மோஷன் காப்ச்சர் தொழில் நுட்பத்தில் எடுத்து பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் தான் தி ஜங்கிள் புக் 2016.

ஜங்கிள் புக் படத்திற்கு U /A தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் படத்திற்கு பெரியவர்கள் உடன் வராமல் குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தப் படம் ரொம்பவும் பயமுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியத்தின் தலைவர் பஹ்லாஜ் நிஹ்லானி இந்திய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் விஷால் பரத்வாஜ், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கும் வகையில் படத்தில் எதுவும் இல்லையென கூறியிருக்கிறார்.

24 Aug 2014
kanniyum kaalaiyum sema kadhal

சிங்கம் சினிமா சார்பில ; இயக்குனர் V.C.வடிவுடையான் தயாரித்து
இயக்கிய ‘கன்னியும் காளையும்’ செம காதல். திரைப்படம் நிறைவடைந்து
ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கரண், தருண்கோபி, விவேக்,
திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்திருக்க, மிக
பெரிய பொருட்செலவில் தயாரான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை
புதுமையான முறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அனைத்து
தொலைக்காட்சிகள், F.M. மற்றும் இணையதளங்களில் ஒரே நேரங்களில்
பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை வெளியிடுகிறார் இதன் படப்பிடிப்பு, காசுமீர்,
குற்றாலம், மைசூர், ஊட்டி, மதுரை, தேனி போன்ற இடங்களில்
படமாக்கப்படடுள்ளன.
இதைப்பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் கூறியதாவது, எனது முதல்
படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் கொலகாரா என்ற பாடல்
எல்லோராலும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கன்னியும் காளையும் செம காதல்’
படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன்.
கரனுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம்
படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியான சில
நாட்களிலேயே அறுபது லடசம் பேர் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெசலாக
5 மேகராக்களை வரவழைத்து 10 நாட்கள் தொடர்ந்து கணல் கண்ணன்
அவர்கள் மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார்.

Your Ad Here
Site Meter