முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு

 (

Tamil comedian actor Vadivelu returns - Joins hands with Vishal

)
Tamil comedian actor Vadivelu returns - Joins hands with Vishal

சுராஜ் இயக்கி  விஷால் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு காமெடி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு 'கத்தி சண்டை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'திமிரு' படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த வடிவேலு, இப்படத்தின் மூலம் இரண்டாம் முறையாக இணைகிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இதற்கு காரணம் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் தான். அப்போது திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரம் செய்து வந்தார்.  குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.  ஆனால், திமுக தோல்வியடைந்து, அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது.

சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம், மருதமலை ஆகிய படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை பிரபலமானவை. அதேபோல், சுராஜ், விஷால் கூட்டணியில் மீண்டும் நகைச்சுவையில் கலக்க களம் இறங்குகிறார் வடிவேலு.

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter