முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

குழந்தைகளுக்கான ஜங்கிள் புக் படத்திற்கு U/A தர சான்றிதழ்

 (

The Jungle Book releases with U/A certification

)
The Jungle Book releases with U/A certification

வால்ட் டிஸ்னி தயாரிப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் நீள் சேத்தி நடிப்பில்,சிறு வயதில் நாம் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக ரசித்த தி ஜங்கிள் புக் கதையை, அதிநவீன சிஜி லைவ் மோஷன் காப்ச்சர் தொழில் நுட்பத்தில் எடுத்து பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் தான் தி ஜங்கிள் புக் 2016.

ஜங்கிள் புக் படத்திற்கு U /A தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் படத்திற்கு பெரியவர்கள் உடன் வராமல் குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தப் படம் ரொம்பவும் பயமுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியத்தின் தலைவர் பஹ்லாஜ் நிஹ்லானி இந்திய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் விஷால் பரத்வாஜ், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கும் வகையில் படத்தில் எதுவும் இல்லையென கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter