முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

கன்னியும் காளையும் செம காதல் கரனுக்கு இது 75வது படம்

 (

kanniyum kaalaiyum sema kadhal

)
kanniyum kaalaiyum sema kadhal

சிங்கம் சினிமா சார்பில ; இயக்குனர் V.C.வடிவுடையான் தயாரித்து
இயக்கிய ‘கன்னியும் காளையும்’ செம காதல். திரைப்படம் நிறைவடைந்து
ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கரண், தருண்கோபி, விவேக்,
திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்திருக்க, மிக
பெரிய பொருட்செலவில் தயாரான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை
புதுமையான முறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அனைத்து
தொலைக்காட்சிகள், F.M. மற்றும் இணையதளங்களில் ஒரே நேரங்களில்
பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை வெளியிடுகிறார் இதன் படப்பிடிப்பு, காசுமீர்,
குற்றாலம், மைசூர், ஊட்டி, மதுரை, தேனி போன்ற இடங்களில்
படமாக்கப்படடுள்ளன.
இதைப்பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் கூறியதாவது, எனது முதல்
படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் கொலகாரா என்ற பாடல்
எல்லோராலும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கன்னியும் காளையும் செம காதல்’
படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன்.
கரனுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம்
படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியான சில
நாட்களிலேயே அறுபது லடசம் பேர் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெசலாக
5 மேகராக்களை வரவழைத்து 10 நாட்கள் தொடர்ந்து கணல் கண்ணன்
அவர்கள் மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார்.

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter