முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

ராதாவின் சகோதரி மகள் நடிக்கும் வலியுடன் ஒரு காதல்

 (

Valiyudan oru Kaadhal

)
Valiyudan oru Kaadhal

மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “வலியுடன் ஒரு காதல்”   இந்த படத்தில் புதுமுகம் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் சகோதரி மகள். கார்த்திகா, துளசி ஆகியோரின் சகோதரி இவர். மற்றும் உமாரவி, வின்சென்ட் சுரேஷ், பஞ்சர்பாஸ்கர், சபா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு   -   எஸ்.செல்வகுமார்
இசை   -  ஜே.கே.செல்வா
பாடல்கள்   -  உமாசுப்பிரமணியம்
கலை   -  சுந்தர்ராஜன்
நடனம்   -  கேசவ் /  எடிட்டிங்   -  சரவணவேல்
எழுதி இயக்கி இருப்பவர்  - சஞ்சீவன்
தாயாரிப்பு மேற்பார்வை  -  தண்டபாணி
தயாரிப்பு  -  ரவிராஜேஷ்
பட பற்றி இயக்குனர் சஞ்ஜீவனிடம் கேட்டோம்.....
கிராமத்தில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ராஜேஷ். பக்கத்து ஊரில் உள்ள பணக்கார நாயகியை காதலிக்கிறான்.இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. முடிவில் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பதைத் தான் திரைக்கதையாக்கி இருக்கிறோம்.
கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திகைப்பூட்டும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
பட விரைவில் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் சஞ்சீவன்.

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter