முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

ஜெயம் ரவிக்கு ஓகே சொல்வாரா அமலா?!

 (

Amala Paul to pair with Jayam Ravi?

)
Amala Paul to pair with Jayam Ravi?

சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து இருக்கும் அமலா பால், அடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கிறார். அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி 'பூலோகம்' என்ற படத்திலும், அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில்தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் கதையை அமலா பாலிடமும் டைரக்டர் சொல்லிவிட்டார். அவருக்கும் கதை பிடித்து போய்விட்டதாம். இதுகுறித்து டைரக்டர் சமுத்திரக்கனி கூறுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது. இதனால் இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்க எண்ணினோம். இன்றைய சூழலில் அமலா பால் தான் அதற்கு பொருத்தமானவர். இரண்டு மொழியிலும் அவர் பிரபலம் என்பதால் அவரை அணுகியிருக்கிறோம். கதையும் அவருக்கு பிடித்து விட்டது. இருந்தாலும் அமலா பால் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருக்கிறது. அது எல்லாம் ஓ.கே.ஆக வேண்டி இருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் எல்லாம் உறுதி செய்யப்பட்டு விடும் என்றார். டபுள் டிலைட்... சாப்பிட என்ன கசக்குதாக்கும்....?

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter