முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

கருணாநிதி தொடங்கி வைத்த உதவி இயக்குனர்கள் ஊதிய திட்டம்

 (

Karunanidhi starts a salary scheme for asst.directors

)
Karunanidhi starts a salary scheme for asst.directors

இயக்குனர் சங்கம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் புதிய அணுகுமுறையாக திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியங்களை இயக்குனர்கள் சங்கத்தின் மூலமாக வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். பெண் சிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம், உதவி இயக்குனர்கள் குணா, அரங்கன், முல்லை, குருமூர்த்தி, சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு ஊதியத்தை வழங்கி கருணாநிதி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் குமரா திரைப்படத்தின் இயக்குனர் டி.கே. சண்முகசுந்தரம், உதவி இயக்குனர்கள் ராம்மோகன், திருத்தணி திரைப்படத்தின் இயக்குனர் பேரரசு, உதவி இயக்குனர்கள் ஸ்ரீதர், மனோகர். மாப்பிள்ளை திரைப்படத்தின் இயக்குனர் சுராஜ், உதவி இயக்குனர்கள் ராஜதுரை, எஸ்.ஆர்.சூரியன் ஆகியோரும் கருணாநிதி மூலமாக சம்பளம் பெற்றனர். நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, துணைத்தலைவர் விக்ரமன், இணைச் செயலாளர்கள் அமீர், ஏகம்பவாணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்
Site Meter