காஜல் அகர்வால் தங்கை நிஷா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பொம்மலாட்டம், பழனி, சரோஜா படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இப்போது இவர் தங்கை நிஷாவும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவரது அப்பா அகர்வால் கூறும்போது, காஜலுக்கு அடையாளம் தந்தது தமிழ் சினிமாதான். தெலுங்கில் அவர் நடித்திருந்தாலும் தமிழில்தான் புகழ்பெற்றார். நிஷாவை பார்த்த தமிழ் திரையுலகினர் சிலர், அவரை நடிக்க கேட்டனர். அவரும் ஒப்புக்கொண்டார். அதற்கான மற்ற பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. அதே நேரம் தெலுங்கிலும் ஒரு படத்தில் நிஷா நடிக்க உள்ளார் என்றார்.