முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

கிளாமராக நடிக்க மாட்டேன்: அனன்யா

 (

I dont want to do glamour roles says Ananya

)
I dont want to do glamour roles says Ananya

கிளாமராக நடிக்க மாட்டேன் என்றார் அனன்யா. சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்தவர் அனன்யா. இவர் தற்போது தெலுங்கில் அம்மாயிக்குடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நாடோடிகள் படம் ஹிட்டாகியிருக்கிறது. என் நடிப்பை எல்லாரும் பாராட்டுகிறார்கள். இதற்கு இயக்குனர் சமுத்திரக்கனியும், ஹீரோ சசிகுமாரும்தான் காரணம். எனது திறமையை எனக்கே நிரூபித்தது இப்படம்தான். எனது பெயரான ஆயில்யாவை அனன்யா என்று சசிகுமார்தான் மாற்றினார். பெயர் மாற்றிய நேரம் நிறைய வாய்ப்புகள் வருகிறது. மலையாளத்தில் நான் நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படங்களிலும் இப்பெயரையே பயன்படுத்த சொல்லியிருக்கிறேன். தமிழில் நல்ல கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். சும்மா வந்து போகும் வேடங்களில் நடிக்க விருப்பமில்லை. நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கவேண்டும். அதே போல கிளாமராகவும் நடிக்க மாட்டேன். தெலுங்கில் கிளாமராக நடிக்க வேண்டியிருக்குமே என்கிறார்கள். நான் நடிக்கும் படத்தில் அப்படி எதுவுமில்லை. இவ்வாறு அனன்யா கூறினார்.

மேலும் செய்திகள்
Site Meter