முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

புத்தகங்கள்

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்) - அசோகமித்திரன்
சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.
வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60
குழி வண்டுகளின் அரண்மனை (கவிதைகள்) - த. அரவிந்தன்
குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பை மிக முக்கியமான கவனம் பெறத் தகுதியுடைய கவிதைத் தொகுப்பாகத் தயங்காமல் முன்வைக்கிறேன்.
வெளியீடு: அருந்தகை E-220, 12வது தெரு, பெரியார் நகர், சென்னை 600082
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்) - ஓட்டமாவடி அறபாத்
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி.
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310
பக்கங்கள்: 207
விலை: ரூ. 130
பிறகொரு இரவு (சிறுகதை) - தேவிபாரதி
கவிஞர் சுகுமாரனின் முன்னுரை இந்த நெடுங்கதைகளின் தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் அவர் பல்வேறு புள்ளிகளை குறிப்புணர்த்திச் சென்றாலும் "அறச்சிக்கல் மீதான படைப்பியல் விவாதம்" என்னும் வரியிலிருந்து இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்கையில் அது இப்பிரதிக்குக் கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 144
விலை: ரூ. 95
சந்தியாவின் முத்தம் (கவிதைகள்) - கவிதா
உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 64
விலை: ரூ. 45
உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) - இசை
குறைகளைப் பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாகச் சுட்டப்போவதில்லை. இத்தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப்படுகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60
எழுதுவினைஞனின் டயறி (சிறுகதைத் தொகுப்பு) - த. ஆனந்தமயில்
ஈழத்து இலக்கியப் பரப்பில் இப்படைப்பாளியின் பெயர் ஞாபகங்களிலிருந்து என்றென்றுமாக அகற்றப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இச்சிறிய சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஆனந்தமயில் ஈழத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.
வெளியீடு: வர்ணா பதிப்பகம், பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை, ஸ்ரீலங்கா
பக்கங்கள்: 61
விலை: ரூ. 150
நிசி அகவல் (கவிதை) - அய்யப்பமாதவன்
நிசி அகவல் இயற்கையை ஒழித்த ஒரு வரண்ட பனுவலாக தன்னை முன்னிறுத்திக்கொண்டிருப்பதன் மூலம் வலை களுக்குள் அகப்பட்டுக்கொண்டு திணறும் பின் நவீன உலகின் நோய்க்கூறான மனநிலையை நம் கண்முன்னே கிலியூட்டும் விதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 24
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60
வேறொரு மனவெளி (சிறுகதை தொகுப்பு) - பாலு மணிமாறன்
"சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் - ஒரு வரலாற்றுப் பார்வை" என்ற தலைப்பில் தொகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டிருக்கும் முனைவர் எம்.எஸ்.லஷ்மியின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் மிகச்சிறந்த ஆவணமாகவும் மலர முடியாத குறை நேரவும் வழிவகுத்துவிட்டன.
வெளியீடு: தங்கமீன் பதிப்பகம், சி-54, முதல் தளம். அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர், சென்னை - 40
பக்கங்கள்: 240
விலை: ரூ. 150
காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்
கான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்.
வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 பக்கங்கள்: 1048 விலை: ரூ. 590
எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் (கவிதைகள்) - அலறி
குறுகிய காலத்துக்குள்ளாகவே மொழியிலும் பார்வையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வரும் அலறியிடம் இன்னும் மேலான கவிதைகளை எதிர்பார்க்கலாம்.
வெளியீடு: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 339, மக்காமடி வீதி, மருதமுனை - 32314, இலங்கை.
பக்கங்கள்: 52
விலை: ரூ. 130
குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் (கட்டுரை) - ஹெச்.ஜி. ரசூல்
தமிழ்ப் பதிப்புலகம் கண்டிருக்கும் பாய்ச்சலைக் கீற்றுப் பதிப்பகம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப்பாட நூல்தான் என்றெண்ணும்படியாக அச்சும் அமைப்பும் உள்ளது.
வெளியீடு: கீற்று வெளியீட்டகம், 1-48கி, அழகிய மண்டபம், முளகுமூடு - 629 167.
பக்கங்கள்: 92
விலை: ரூ. 50
படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும் - தி. அழகிரிசாமி
தி. அழகிரிசாமியின் இந்தச் சீரிய தொகுப்பினைத் தமிழர் அனைவரும் படித்து ஈழத் தமிழர் படும் இன்னல்களைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். நம் கண்ணுக்கு முன்னர் வரலாறு உருவாகிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
வெளியீடு: தமிழக்குலம், 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை 600 004.
பக்கங்கள்:
விலை: ரூ. 40
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா. முருகவேள்)
* இந்நூல் மிக எளிய முறையில் தமிழில் கதைசொல்லும்பாங்கில் அமெரிக்காவின் கேவலமான அரசியல் பொருளாதார உத்திகளை விளக்கிச்செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.
வெளியீடு: விடியல் பதிப்பகம் 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு) கோயம்புத்தூர் 641 015
பக்கங்கள்: 320
விலை: ரூ. 100
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர் பாஸ்கரன்
வேதாகமம் "காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்கிறது. அடுத்த தலைமுறைக்கான மழை இப்போதும் பெய்கிறது. பாதுகாப்பதும் பரிதவிப்பதும் அவரவர் விருப்பம்.
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 200
விலை: ரூ. 120
வழித்தடங்கள் (கட்டுரை), - தொ. பரமசிவன்
"வழித்தடங்க"ளின் இறுதியில் புறநானூறு ஓர் எளிய அறிமுகம் என்ற பெயரில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கான மதிப்புரையும் ஆசிரியரின் நேர்காணலும் புரிதலுக்காகப் பின்னிணைப்பில் தரப்பட்டிருந்தாலும் இவையும் மற்ற கட்டுரைகளைப் போலவே செறிவும் நுட்பமும் ஆழமும் நிறைந்த ஆய்வாகவுள்ளன.
வெளியீடு: யாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி
பக்கங்கள்: 128
விலை: ரூ. 70
மௌனங்களின் நிழற்குடை (கவிதை) - இசாக்
மௌனங்களின் நிழற்குடை - காதலர்களின் வெண்கொற்றக்குடை! 'இசாக்'கின் எழுதுகோல் நம் இதயத்தில் நடக்கும் நடைஉண்மைக் காதலர்களின் உள்ளம் உடுத்திக்கொள்ளும் உடை!
வெளியீடு: தமிழ் அலை
பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை - முனைவர் ஆ. மணவழகன்
அட்டைப்பட வடிவமைப்பும், நூலாக்கமும் இத்தலைப்புக்கான கம்பீரத்திற்கு ஈடு கொடுக்கின்றன. பேராசிரியர் வ. ஜெயதேவன் அழகான சுருக்கமான முன்னுரை வழங்கியிருக்கிறார். இளைய ஆய்வாளர் முனைவர் ஆ. மணவழகன் மிகுந்த வாசிப்பு அனுபவத்தோடும், தமிழின அரசியல் புரிதலோடும் ஆய்வுலகத்திற்கு வந்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கும், தமிழின மரபை உணர்ந்கொள்ளத் துடிப்பவர்க்கும் மிகுதியான தரவுகளை உள்ளடக்கிய நூல் இது.
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
பக்கங்கள்:
விலை: ரூ.
குறிப்பேட்டிலிருந்து... (நேர்காணல், கட்டுரை) - அ. யேசுராசா
செங்கை ஆழியானின் நாவலுக்கு யேசுராசா எழுதியுள்ள மதிப்புரையைப் படிக்கும்போது அவரது விமர்சனத்தின் நியாயத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்துப் பிழைகளில்லாமல் நூலாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.
வெளியீடு: அலை வெளியீடு, இல. 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
பக்கங்கள்: 132
விலை: ரூ. 200
நல்லம்மா - சூரங்குடி அ. முத்தானந்தம்
சூரங்குடி அ.முத்தானந்தம் அவர்கள் எழுதியது.புதைந்து போய்க் கொண்டுள்ள கிராமியக் கலாச்சாரத்தை அகழ்ந்து எடுத்து விரிக்கும் வேலையை தன் தோளில் போட்டுக் கொண்டு செய்கிறவராக முத்தானந்தம் இருக்கிறார்.
வெளியீடு: அருவி வெளியீடு, 5டி, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை
பக்கங்கள்: 224
விலை: ரூ. 125
கன்னி (நாவல்) - ஜெ. பிரான்சிஸ் கிருபா
தனது மூன்று கவிதைத் தொகுப்புகள் மூலம் கவனமும் வலியோடு முறியும் மின்னல் மூலம் அங்கீகாரமும் பெற்ற ப்ரான்சிஸ் கிருபா என்ற கவிஞர் தன் முதல் நாவலை, அதற்குரிய எந்தச் சலுகையையும் கோராமல், சிறப்பாகப் படைத்திருக்கிறார்.
வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014
பக்கங்கள்: 432
விலை: ரூ. 250
பெயல் மணக்கும் பொழுது (கவிதைகள்) - தொகுப்பு: அ. மங்கை
"தமக்கான காலமும் நேரமும் வெளியும் அற்று இடப்பெயர்வும் அங்கலாய்ப்பும் அவற்றை எதிர்கொள்வதுமே வாழ்வாகிப்போன இக்கால கட்டத்தில்" ஈழப் பெண் கவிகளின் இத்தொகை சீரிய முயற்சியாகும்.
வெளியீடு: மாற்று, 1, இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா நகர் சூளைமேடு, சென்னை - 600 094
பக்கங்கள்: 280
விலை: ரூ. 130
வேலைக்காரிகளின் புத்தகம் (கட்டுரைகள்) - ஷோபா சக்தி
விசுவாசங்களுக்குப் பழகிய மனத்தின் எதிர்ப்பையும் கலகக்கார மனத்தின் பெருத்த ஆதரவையும் ஒரே சமயத்தில் ஈட்டிக்கொள்ளும் புத்தகம் இது.
வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005
பக்கங்கள்: 144
விலை: ரூ. 65
கங்கணம் (நாவல்) - பெருமாள் முருகன்
மனித மனங்களின் ஆசைகளும், அதிர்வுகளும் பயங்களும் உலகம் முழுவதும் ஒன்றுதான். இந்த ஒற்றுமையின் ஒரு மின்னலைப் பெருமாள்முருகனின் நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. இதுவே இந்த நாவலின் பெரிய வெற்றி.
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310
பக்கங்கள்: 422
விலை: ரூ. 235
கீழிருந்து எழுகின்ற வரலாறு - மகாராசன்
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், வள்ளலார் தெரு, சூளை மேடு, சென்னை - 600 094
விலை: ரூ. 50
வலி (கவிதை) - அறிவுமதி
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.
வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம், தியாகராயர் நகர், சென்னை - 600 017
பக்கங்கள்: 96
விலை: ரூ. 70
சல்வடார் டாலி (சிறுகதைத் தொகுப்பு) - மொழிபெயர்ப்பு: திலகவதி
திலகவதியின் எழுத்து வாழ்க்கையில் 'சல்வடார் டாலி' - சிறுகதைத் தொகுப்புக்கு முக்கிய இடம் உண்டு.
வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சக்தி நகர், போரூர், சென்னை - 600 116
பக்கங்கள்: 234
விலை: ரூ. 120
எலும்புக்கூட்டின் வாக்குமூலம் (கவிதை) - அநாமிகன்
கலைத்துவமாக வெற்றி பெறாத கவிதைகளிலும்கூட மிகையுணர்வோ, போலித்தனமோ இல்லையென்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம். யுத்த காலச் சூழலைப் பதிவு செய்யும் இத்தகைய கவிதைகளில் எளிதாகவே படர்ந்துவிடும் "களிம்பு" அநாமிகனிடம் இல்லையென்பதும் அவரிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வெளியீடு: அழகியல் கலாமன்றம், கிளிநொச்சி
பக்கங்கள்: 88
விலை: ரூ. 150
வெளி வாங்கும் காலம் (சிறுகதை தொகுப்பு) - என். ஸ்ரீராம்
மொத்தத்தில் எளிய வறண்ட பூமியின் பல்வேறு வகை மாதிரியான மனிதர்களின் வாழ்க்கையும், அனுபவங்களும், நம்பிக்கைகளும், குரூரங்களும், செறிவும், வலிமையும் கொண்ட படைப்பு.
வெளியீடு: கனவுப்பட்டறை. 3, பிரகதாம்பாள் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
பக்கங்கள்: 115
விலை: ரூ. 80
கனவுகள் விரியும் - விழி. பா. இதயவேந்தன்
கவிஞர் விழி.பா.இதயவேந்தன் என்ற பா.அண்ணாதுரய் அவர்கள் தலித் சிறுகதை எழுத்தாளர் என்றே பொதுவாக அறியப்படுகின்றார். 1984 முதல் எழுத ஆரம்பித்த இவரின் இலக்கியப் பயணம் இன்று கிட்டத்தட்ட 14 புத்தகங்களாக இந்த விளிம்புகளுக்கு வெளிச்சம் தந்துக்கொண்டிருக்கின்றது.
வெளியீடு: அனுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017
பக்கங்கள்: 112
விலை: ரூ. 30
ஒரு பேனா, சில தாள்கள் - வதிலை அப்பாஸ்
எந்த ஒரு கவிதையும் அதன் கவிதை வடிவத்தை உடைத்துக்கொண்டு வெளிவரும் போதுதான் அது புதியதொரு இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. அதுதான் புதுக்கவிதையின் இலக்கணமும்கூட...
வெளியீடு: சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 40
விலை: ரூ. 10
பதுங்கு குழிநாட்கள் (கவிதைகள்) - பா. அகிலன்
பதுங்கு குழி நாட்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் தலைப்பில் உள்ள "அக்கனி குஞ்சு", கவிதையில் இல்லாது போகிறது. ஆசிரியர் ரொமாண்டிசத்திடம் சற்று சமரசம் செய்து கொள்ளவே முயன்றிருக்கின்றார்.
வெளியீடு: குருத்து
விலை: ரூ. 45
நெடுஞ்சாலை மனிதன் (கவிதைகள்) - உமாபாரதி
நெடுஞ்சாலை மனிதன் என்று கேட்ட மாத்திரமே வாசகன் தன் மனதில் ஒரு வினோத உணர்வை அனுபவிப்பதோடு, கவிதை என்ன தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும் அடைகிறான்.
வெளியீடு: உமாபாரதி
புராதனக் காற்று (கவிதைகள்) - பீனிக்ஸ்
தமிழ்க் கவிதைக்கு ஃபீனிக்ஸ் ஒரு புதிய நம்பிக்கையைத் தரும் வரவுதான் என்பதை அவரது புராதனக் காற்று தொகுதி நிரூபிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது - முன்னுரையில் பிரம்மராஜன்.
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை - 606601.
பக்கங்கள்: 70
விலை: ரூ. 30
ஆழி சூழ் உலகு (நாவல்) - ஜோ டி குருஸ்
நுண்ணிய சித்தரிப்புமூலம் இந்நாவலை நம் மனதில் ஆழமாக நிறுவுகிறார் ஜோ.புலிச்சுறாவை அதன் மனைவி தொடர்ந்துவரும் காட்சி, தனுஷ்கோடியை புயல்கொண்ட காட்சி போன்றவை நாவல் நம்மில் உருவாக்கும் அழியா சித்திரங்கள். என் வாசிப்பில் இதில் வரும் சுறாவேட்டை கண்டிப்பாக ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலைவிட பலமடங்கு துடிப்பான ஒன்று.
வெளியீடு: தமிழினி
பக்கங்கள்: 552
விலை: ரூ. 265
தேநீர்க் கலை (ஜப்பானியர் கலை ரசனை) - ஓவியர் அ. பெருமாள்
இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள உயிர்த் தொடர்பை உணர்ந்து இயற்கையோடு இணைந்து இசைபட வாழவேண்டுமென்ற ஆர்வம் இந்த நூலைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டாகும்.
வெளியீடு: கதிர் பதிப்பகம், மதுரை - 625003
விலை: ரூ. 12
அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து... - ஜா. மாதவராஜ்
மாதவராஜின் மொழியில் சொன்னால் மனித குல விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள். அதையும் தவறாது சுட்டிக்காட்டியிருக்கும் ஜா. மாதவராஜ் அந்த வேலையை முறியடிக்கும் தனது முயற்சிகளில் ஒன்றாக 'சே குவேரா (அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...) ' நூலைப் படைத்துள்ளார்.
வெளியீடு: ஜா. மாதவராஜ், பாரதி புத்தகாலயம், 2, குயவர் வீதி, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15.
பக்கங்கள்: 128
விலை: ரூ. 40
கருப்பு அடிமைகளின் கதை - பெ. சண்முகம்
'கருப்பு அடிமைகளின் கதை' - படிப்பவர்களை ஒரு உலுக்கு உலுக்கும் இன ஒதுக்கல், சாதி ஒதுக்கலுக்கு எதிராக, எவ்வளவு மோசமான மனப்போக்கு உள்ளவர்களையும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ. 200
ஏர்லி தமிழ் எபிகிராபி - இரவாதம் மகாதேவன்
இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை பெற்ற இரவாதம் மகாதேவன், 1970-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது.
வெளியீடு: இரவாதம் மகாதேவன்
விலை: $. 15.00
ஓஹியோ நதிக்கரையில்... (பயண நூல்) - சா. இரவி செல்வன்
நூலினை வாசிப்பது என்பது புலன்களை கட்டுடைத்து மீண்டும் பழைய நிலையில் கட்டுமானம் செய்வதாகும்.. புலன்களை கட்டுடைப்பது வாசகனை நூலின் தளத்துக்குக் கொண்டு செல்வதாகும். நிகழ்கால மனத்தின் இருப்பில் இருந்து நூலாசிரியனின் மன இருப்புக்கு அலைத்துச் செல்வது என்பது எளிதான நிகழ்வன்று. ஆனால் இந்நூலாசிரியருக்கு அது இயல்பாகவே அமைந்துள்ளது.
வெளியீடு: அன்பு அச்சகம், மதுரை - 625 001.
பக்கம்: 174
விலை: ரூ. 100
மழை ஓய்ந்த நேரம் - இ. இசாக்
'மழை ஓய்ந்த நேரம்' - இந்த தொகுதியில் 112 கவிதைகள் உள்ளன. பக்கத்திற்கு பக்கம் ஒளிப்படங்களுடன் நூல் காட்சி இன்பமும் கவிதை இன்பமும் தருகிறது. படங்களை கவிதைக்கு பொருத்தமான காட்சிகள் என்று பாராமல் அவற்றை தனித்தனி காட்சிகளாகவே பார்க்கலாம்.
வெளியீடு: சாரல், 189, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017.
பக்கம் : 80
விலை: ரூ 30
இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல்) - சல்மா
1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர் சல்மாவின் முதல் நாவல் இது.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001.
பக்கம்: 520
விலை: ரூ. 250
ஒப்பியல் இந்திய இலக்கியம் ஓர் அறிமுகம் - முனைவர். அ. பிச்சை
வார்த்தைகளை வருத்தாமல் கருத்துகளை எளிமையாக்கி தற்சார்பற்றநிலை, சோதித்தறியும் தன்மை, மயக்கமின்மை முதலிய முறைகளில் நூலினை எடுத்துச் சென்றிருப்பது சிறப்பான ஒன்றாகும். "இந்திய மொழிகளில் தலித் இலக்கியம்" என்ற பொதுவான தலைப்பிருந்தும் பஞ்சாபி தலித் இலக்கியம் என தனியாகக் கட்டுரை அமைந்திருப்பதற்கு ஆசிரியர் கூறும் காரணம் சற்று நெருடலாகவே உள்ளது. தெலுங்கு, இந்தி போன்ற இலக்கிய வரலாற்றினையும் தவிர்த்திருக்கலாம்.
வெளியீடு: கபிலன் பதிப்பகம், காந்தி கிராமம், திண்டுக்கல்
பக்கம் : 184
விலை ரூ. 65.௦௦
பிணங்களின் முகங்கள் (நாவல்) - சுப்ரபாரதிமணியன்
"பிணங்களின் முகங்கள்" நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2003 ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது பரிசு பெற்றது.
வெளியீடு: கனவு
ஆட்சித் தமிழ் (ஓர் வரலாற்றுப் பார்வை) - சு. வேங்கடேசன்
கவிஞர். எழுத்தாளர். இயக்கவாதி, அரசியல்வாதி, களப்பணியாளர். ஆய்வாளர், பேச்சாளர் இத்தனை முகங்களையும் உள்ளடக்கிய பன்முக ஆற்றல் பொருந்தியவர் எழுத்தாளர் சு. வெங்கடேசன். அரசியலுக்கு வரவிரும்பாத எழுத்தாளர்கள் மத்தியில் அரசியலில் இருந்து சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்திருப்பவர்.
வெளியீடு: நூல் விநியோக விற்பனை மையம்
விலை: ரூ. 40
நூல் விநியோக விற்பனை மையம்: 2 குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600015.
சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ (தமிழக்கம்: அமரந்த்தா - சிங்கராயர்)
"சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்ற இந்நாவல் கிக்கூயூ மொழியில் வெளிவந்து. கூகி, "சிலுவையில் தொங்கும் சாத்தான்" நூலில் மேற்கத்திய குறியியலை தலைகீழாக நிற்க வைக்கிறார்.
வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை 600 078
பக்கம் : 424
விலை ரூ. 125.00
Site Meter