முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

முன்னுரை

அரசு தனது அதிகாரத்தினை முழுமையாக செலுத்த மக்களின் மொழியினை தனது மொழியாக்கிக் கொள்ள முயலும். ஏனெனில் மொழியின் வேர்கள் அதனை புழங்குகின்ற மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம், நம்பிக்கை என அனைத்துத் தளத்திலும் பரவி காணப்படுவதால் அதனைக் கட்டிக் காக்க வேண்டிய தேவையின் விளைவாக விளைந்ததே "சங்கம்" என்னும் ஆன்றோர் அடங்கிய தொகுப்பு.

சங்கம் முதல், இடை, கடை என பலராலும் பலவிதமாக பேசப்பட்டாலும் அதன் இருக்கையான சங்கப்பலகையின் தலையாய நோக்கமாக, நூலினை ஆக்கியோன் கொண்டு நடுநிலையோடு விவாதத்திற்குட்படுத்தி அரங்கேற்றம் செய்யும் நிகழ்வு தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அதே தளத்தில் நின்று அப்பெயரினை தாங்கியபடியேயும், கருத்துருவாக்கத்தில் மாறாது அப்பணியினை செய்ய உங்கள் கண்முன்னே விரிவது இச்சங்கப் பலகையாகும்....... ..இனி நூல்களைப்பற்றி காண்போம்....

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்) - அசோகமித்திரன்
சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.
வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60
குழி வண்டுகளின் அரண்மனை (கவிதைகள்) - த. அரவிந்தன்
குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பை மிக முக்கியமான கவனம் பெறத் தகுதியுடைய கவிதைத் தொகுப்பாகத் தயங்காமல் முன்வைக்கிறேன்.
வெளியீடு: அருந்தகை E-220, 12வது தெரு, பெரியார் நகர், சென்னை 600082
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்) - ஓட்டமாவடி அறபாத்
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி.
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310
பக்கங்கள்: 207
விலை: ரூ. 130
பிறகொரு இரவு (சிறுகதை) - தேவிபாரதி
கவிஞர் சுகுமாரனின் முன்னுரை இந்த நெடுங்கதைகளின் தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் அவர் பல்வேறு புள்ளிகளை குறிப்புணர்த்திச் சென்றாலும் "அறச்சிக்கல் மீதான படைப்பியல் விவாதம்" என்னும் வரியிலிருந்து இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்கையில் அது இப்பிரதிக்குக் கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 144
விலை: ரூ. 95
சந்தியாவின் முத்தம் (கவிதைகள்) - கவிதா
உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 64
விலை: ரூ. 45
உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) - இசை
குறைகளைப் பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாகச் சுட்டப்போவதில்லை. இத்தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப்படுகிறது.
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60
எழுதுவினைஞனின் டயறி (சிறுகதைத் தொகுப்பு) - த. ஆனந்தமயில்
ஈழத்து இலக்கியப் பரப்பில் இப்படைப்பாளியின் பெயர் ஞாபகங்களிலிருந்து என்றென்றுமாக அகற்றப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இச்சிறிய சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஆனந்தமயில் ஈழத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.
வெளியீடு: வர்ணா பதிப்பகம், பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை, ஸ்ரீலங்கா
பக்கங்கள்: 61
விலை: ரூ. 150
நிசி அகவல் (கவிதை) - அய்யப்பமாதவன்
நிசி அகவல் இயற்கையை ஒழித்த ஒரு வரண்ட பனுவலாக தன்னை முன்னிறுத்திக்கொண்டிருப்பதன் மூலம் வலை களுக்குள் அகப்பட்டுக்கொண்டு திணறும் பின் நவீன உலகின் நோய்க்கூறான மனநிலையை நம் கண்முன்னே கிலியூட்டும் விதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 24
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60
வேறொரு மனவெளி (சிறுகதை தொகுப்பு) - பாலு மணிமாறன்
"சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் - ஒரு வரலாற்றுப் பார்வை" என்ற தலைப்பில் தொகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டிருக்கும் முனைவர் எம்.எஸ்.லஷ்மியின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் மிகச்சிறந்த ஆவணமாகவும் மலர முடியாத குறை நேரவும் வழிவகுத்துவிட்டன.
வெளியீடு: தங்கமீன் பதிப்பகம், சி-54, முதல் தளம். அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர், சென்னை - 40
பக்கங்கள்: 240
விலை: ரூ. 150
காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்
கான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்.
வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 பக்கங்கள்: 1048 விலை: ரூ. 590
Site Meter