முதல் பக்கம் » கவிதை » மரபுக் கவிதை
மரபுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

நாளைய இளைஞன் ...

வனிதா வாணி

இளைஞனே....
இவ்வுலகத்தில்
இயல் ,இசை , நாடகம்,
என்னும் முத்தமிழை
பயிலாவிடினும்
தமிழன் என்ற
உணர்வை
தெவிட்டத் தெவிட்டப்
பருகிவிடு.......

இடையறாத இவ்வுலகில்
உன் இமைகளை
இமைக்காமல் வைக்க
மறக்காதே.....

உனக்குள் பொதிந்திருக்கும்
பல கேள்விகள்
உன்னால் விடை காண
காத்திருக்கின்றன.....

உன்னுடைய பிறப்பும்,
இறப்பும் கூட
இருட்டில் தான்...
ஆம்..
உன் கருவறையும்
கல்லறையும் இருட்டு தானே?

உனக்கு இடையில்
இருக்கும் இயங்கா
உலகத்தை இயக்கக்
கற்றுக்கொள் .....

உன் கண்களை
திறந்து திரியும்
சூரியனுக்கு
மெருகூட்டு....

கண்முன்னே கொலை
நடந்தாலும்
தலைக்கணம்
கொண்ட உலகம்
ஊமை வேடம் போடும்.....

காதல்,
காமம்,
கோபம், இவை
உன் வெற்றியைக்
குலைக்க இவ்வுலகம்
போட்ட வேகத்தடைகள்.....

சூழ்ச்சிக்கடலில்
அலைகளாய் நகைக்கும்
மங்கையின் அகத்தில்
வீழ்ந்து விடாதே....
அலைகள் உன்னை
அடித்துச் சென்று விடும்....

புதிதாய்ப் புறப்பட்டு
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும் ...
வாலிபனே...
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது....

கைகூப்பி கடவுளை
வேண்டு...
காதலர்கள் அற்ற
கடற்கரையை...
நண்பர்கள் உற்ற
உலகத்தை....
சாதிகள் சரிந்த
சமுதாயத்தை....
ம்ம்ம்ம்...

நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல....
வீரியனே
உனக்கும் தான்......!

மரபுக் கவிதை

Site Meter