
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி தனது வீட்டில் மந்திரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் ராணுவ தளபதி ஆசிப் பர்வேஸ் கயானி, உளவுப்படை தலைவர் ஷாகிர்-உல்-இஸ்லாம், வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கார், உள்துறை மந்திரி ரகுமான் மாலிக், ராணுவ மந்திரி சவுத்திரி அகமத் முக்தார், நிதி மந்திரி அப்துல் சயீக் மற்றும் அமெரிக்காவுக்கான தூதர் ஷெர்ரி ரகுமான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம், அங்கு அமைதி திரும்ப அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.