19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 30 ஜுலை 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

டில்லி விமான நிலையத்தில் அதிமுக - திமுக எம்.பி.,க்கள் மோதல்

புதுடில்லி

டில்லி விமான நிலையத்தில் அதிமுக மற்றும் திமுக எம்.பி.,க்கள் கடும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருவதால் தமிழக எம்.பி.,க்கள் டில்லியில் இருந்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் பார்லி., விடுமுறை என்பதாலும், டில்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் டில்லியில் இருந்த தமிழக எம்.பி.,க்கள் இன்று தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிமுக மற்றும் திமுக எம்.பி.,க்கள் டில்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது இரு கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் அது தீவிரம் அடைந்தது . இரு கட்சி எம்.பி.,க்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய மறுத்ததுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். டில்லி விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் முன்னிலையில் தமிழக எம்.பி.,க்கள் மோதலில் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.⁠⁠⁠⁠


Site Meter