21 மே, 2013. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 25 ஏப்ரல் 2012

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

'மிடாஸ்' மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, ஏப். 25-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரப்பகுதி வி.ஏ.ஓ. அன்பழகன். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், திவாகரன் (சசிகலாவின் தம்பி), 'மிடாஸ்' மோகன் ஆகியோர் மன்னார்குடியில் உள்ள மதுக்கூர் சாலை அருகே, ரியல் எஸ்டேட் அடிப்படையில் குடியிருப்பு மனைகளை அமைத்து புதிய நகர் ஒன்றைத் தொடங்கினர்.

ஆனால் இந்த புதிய நகருக்கு சாலை வசதிகள் இல்லை. அரசு புறம்போக்கு நிலத்தில் 6 ஆயிரத்து 300 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, மதுக்கூர் சாலையில் இருந்து அந்த புதிய நகருக்கு பாதை அமைத்தனர் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில் திவாகரன், மிடாஸ் மோகன் மற்றும் 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மிடாஸ் மோகனும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Site Meter