ஆபரேஷன் சக்ஸஸ்

"பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?" "டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."


"டாக்டருக்கு தன்னம்பிக்கை குறைவு போல" "எதை வச்சி சொல்ற?" "தினசரி பத்து பக்கத்துக்கு ஆபரேஷன் சக்ஸஸ்னு எழுதிக்கிட்டு வர்றாரே.."


"பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?" "ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்..!"


"அவன் வித்தியாசமான பக்தன்னு எப்படிச் சொல்றே?" "திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டியிருக்கான்"


"கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு.. அதான்" "நீங்க சாப்பிடறது கேரட் இல்லை.. முள்ளங்கி..!"