ஸ்ட்ராங்

"உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.." "சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."


"ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?" "சவுண்டை கம்மி பண்ணலைங்க.. நான் தான் முடிவெட்டும்போது தெரியாம உங்க காதை கட் பண்ணிட்டேன்!"


கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட? மனைவி: ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்......!


நோயாளி: டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல... டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே? திருடன்: அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.