ஹைட்ரஜன் சிலிண்டர்

"உங்கப் படத்தைப் பத்தி இணையத்திலே நல்லா அடிச்சு துவைச்சுட்டாங்களே..." "அதனாலதான் படத்தில கலர் அங்கங்க திட்டுத் திட்டா தெரியுதா?"


விசாரணை அதிகாரி: நோ-பால் போட காசு வாங்கினீங்க சரி! ஆனா ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அம்பயரைப் பார்த்து ஏன் அழகு காண்பிச்சீங்க வீரர்: அம்பயர் சூதாட்டக்காரரோட மாமனாராம், அதனால அழகு காண்பிச்சாத்தான் காசு தருவேன்னு சொன்னார் அதான்.


"ஆக்சிஜன்லே இருந்த கோமா பேஷண்ட் எப்படிக் பொழச்சிக்கிட்டாரு?" ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலா அடைக்கிற ஹைட்ரஜன் சிலிண்டர் தவறுதலா சப்ளை ஆகியிருக்கு டாக்டர்!"


"உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே ஏன்?" "கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு சொன்னேன். அதை அவன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டான்..."


"அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே....?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்..."