'சம்திங்' வாங்க மாட்டேன்!

"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?" "கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"


"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?" "எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."


"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற... "சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"


முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!


மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!" கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"