வால் போஸ்டர் பார்த்தீங்களா!

ஏய்யா.. கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே.. எங்கே? "அவன் சட்டையே போடலீங்க சார்!"


"வால் போஸ்டர் பார்த்தீங்களா! கோவையில் முக்கிய நபர் கைதுன்னு போட்டிருக்கான்." "ஏன் சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?"


திருடனிடம் வீட்டுக்காரர்: உனக்கு எவ்வளவு வயசிருக்கும்? "ஏன் கேட்கிறே?" "நான் வயசுக்கு மரியாதை தருபவன். நீங்க போன பிறகு 'திருடன்'ன்னு கத்தறதா, 'திருடர்'ன்னு கத்தறதான்னு சந்தேகம்.


"கூட்ட நெரிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்..!" "அடப்பாவமே... யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுட்டிருந்தவரா..." "இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்...!"


"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."