கொலை மிரட்டல்

"டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?" "அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?" "ஆமாம்" "அப்போ சந்தோஷமான விஷயம்தான். கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது."


"நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?" "கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்... கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"


"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"


"கூட்டத்துல பேச்சு நடுவே ஏன் உண்டி கொடுத்தோர் உயிர் குடுத்தோர்ன்னு தலைவர் சொல்றாரு..?" "உண்டியல் குலுக்கறவன் புது ஆள் அவன் பத்திரமா தன்கிட்டே திரும்பி வரணம்னுதான் அப்படிப் பேசறார்.."


"போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?" "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"