மைக் டெஸ்ட்

"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.." "எதனால?" "நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"


மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது.. கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?


பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.


"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.." "பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.." "நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."


"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?" "அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....." "இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?....என்னிக்கு என் மூஞ்ச நிமுந்து பாத்திருக்கீங்க..ம்ஹும்!"