மேஷம் -

Aries Tamil Predictions

ஜனவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 19, 22, 24.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு சனி, சுக்ரன், கேது ஆகிய 3 முத்தான கிரகங்களின் ஆசியோடு துவங்குகிறது. 9, 10 இடங்களில் சூரியன் வலம் வருவதால், மாத முன் பகுதியில் தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற சற்று சிரமப்பட வேண்டி வரும். 8, 9 வீடுகளில் சுக்ரன் நிற்பதால், உறவினர்களின் மத்தியில் உங்கள் சொல்லுக்கென்று தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும். பிறகு சூரியன் 10ம் இடம் செல்வதால், புதிய எண்ணங்களில் செயலாக்கத்தால், வியாபார வட்டம் மேலும் விரிவாகும். புதன் முதல் வாரம் முதல் 29ம் தேதி வரை 9ம் வீட்டிலும் பிறகு 10ம் வீட்டிலும் உள்ளார். மாணவர்கள் மறதியும், பதற்றமும் வளர இடம் கொடுக்காமல் வேலை செய்வது நல்லது. 3ல் கேது உங்கள் பேச்சாற்றல் சிறப்பாகத் திகழ்வதால், தோல்விகளை வெற்றியாய் மாற்றி விடுவது எளிதாகும். உயர்மட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். 10ம் வீட்டில் செவ்வாய், கர்ப்பிணிப் பெண்கள் மிதமான உணவு வகைகளைத் தேர்வு செய்தல் நலம். 9ல் ராகு. பிறர் செய்யும் தவறுகளுக்காக சில நேரம் நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். வியாபாரிகள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறிய சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடைபிடிப்பது அவசியம்.

பிப்ரவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 28

செவ்வாய் லாபம் தரும் 11ம் இடத்திற்கு 16ம் தேதி முதல் செல்கிறார். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறனால், முக்கியமான பணியை முடித்து தங்கள் பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள். 18ம் தேதி முதல் புதனும் 11ம் இடத்திற்கு போவதால், நல்லோரின் நட்பும், வழிகாட்டுதலும் உங்களின் அரணாய் விலகும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் வரவும், லாபமும் அதிகமாகும். சூரியன் மாத முன் பகுதியில் 10ம் இடத்தில் நிற்பதால், மாணவர்களின் தேடலுக்கேற்ப திறமை மேலும் மெருகு பெறும். உறவினர் ஒருவரால், தொழிலில் புதிய திருப்பம் ஏற்படும். பின் பகுதியில் சூரியன் 11ல், நட்பு மூலம் பல காரியங்கள் பலிதமாகும். 23ம் தேதி வரை சுக்ரன் 9ல். கலைஞர்களுக்கு வராமலிருந்த பணம், வாய்ப்பு இரண்டும் உங்கள் இடம் தேடி வரும். பிறகு அவர் 10ம் இடம் மாறுகிறார். அதிக அலைச்ச்ல, வேலை தப்பிய உணவு ஆகியவற்றால், ஆரோக்கியம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்களை நம்பி பிறருக்கு எந்த வாக்குறுதியும் தர வேண்டாம்.

மார்ச்

அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 28, 30.

சுக்ரன் 22ம் தேதியிலிருந்து நன்மை தரும் 11ம் வீட்டுக்கு செல்கிறார். கலைஞர்கள் பெறும் பாராட்டுகள், பரிசுகள் ஆகியவை அவர்களை உற்சாகப்படுத்தும், நெம்புகோலாய் அமையும். சூரியன் இந்த மாதம் 11, 12 வீடுகளில் நிற்கிறார். முன் பகுதியில் வியாபாரிகள் போட்டிகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவார்கள். பிற்பகுதியில் சோம்பேறித்தனம் எதிலும் உங்களை பின் தள்ளிவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். செவ்வாய் 25ம் தேதி முதல் 12ம் வீட்டுக்கு மாறுவதால், வாழ்க்கைத் துணையோடு இணக்கமாக நடந்தால், சச்சரவு ஏதுமிராது. பணியிடங்களில் கவனமாக நடந்துகொண்டால், சிறு பிரச்சினைகளால் சிந்தனை சிதறாமலிருக்கும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். வீண்சோர்வு எட்டிப் பார்க்காமலிருக்கும். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை. புதனும் இந்த மாதம் 12, 1 வீடுகளில் தங்குவதால், மாணவர்கள் கல்லூரி நூலகம் மூலம் பெறும் புத்தகங்களை பாதுகாப்பாக வைத்தால், வீண் தண்டம் கட்டுவதைத் தவிர்க்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் மட்ட கூட்டங்களில், தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடவும்.

ஏப்ரல்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 24, 28.

11ல் நிற்கும் சுக்ரன் 16ம் தேதி முதல் 12ம் இடத்திற்கு செல்கிறார். வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். உங்களின் திறமைக்கு சான்றாக புதிய முயற்சிகளில் முன்னேற்றம் பெற சுக்ரன் உதவுவார். சூரியன் 12 மற்றும் 1ம் வீடுகளைப் பங்கு போட்டுக்கொள்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தங்கள் பெயரை நிலை நாட்ட வேண்டி வரும். செவ்வாயோடு 1ம் தேதி முதல் 22ம் தேதிவரை வக்ரம் பெறும் புதனும் 12ம் வீட்டில் நிற்பதால், பணியில் இருக்கும் பெண்கள் முக்கியமான பணியை முடிக்கும் பொருட்டு நேரம் காலம் பாராமல் உழைப்பார்கள். வியாபாரிகள் பொருள்களின் தரம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் கவனமாக இருப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் சொற்சிக்கனத்தை மேற்கொள்வதுடன் திறமையுடன் செயல்பட்டால், லாபகரமான வாய்ப்புகள் கை நழுவாமலிருக்கும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் கலைஞர்களின் வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம்.

மே

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 18, 19, 24, 27, 28.

சுக்ரன் 4ம் தேதி முதல், உங்கள் ராசியில் நிற்கிறார். கலைஞர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் மூலம் வருமானம் மேலும் பெருகும். சூரியன் 1, 2 வீடுகளில் பயணம் செய்வதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால், உற்சாகத்துடன் வலம் வர இயலும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வியாபாரிகள் அதிக சிரமங்களை மேற்கொள்வர். 3ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்கு வந்து விடுகிறார். தொழிலதிபர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய உரிமங்களை, தாமதமின்றி புதுப்பித்துக்கொண்டால் வேண்டாத மன உளைச்சலைத் தவிர்த்து விடலாம். இந்த மாதம் குரு பகவான் 7ம் தேதி முதல் 1ம் இடத்திற்கு செல்கிறார். பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், குடும்பத்தில் பணமுடை ஏற்படாமலிருக்கும். அக்கம் பக்கத்தாருடன் இதமாய் நடந்துகொண்டால், உறவுகளில், விரிசல் விழுவதைத் தவிர்த்து விடலாம். மே 14 வரை 10ல் உலா வரும் சூரியனோடு 3ம் தேதி முதல் செவ்வாயும் 11ம் தேதி முதல் புதனும் சேர்வதால், உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மே 30 முதல் புதன் 11ம் இடத்தில், மந்த நிலை மாறி மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மே 15 முதல் 11ம் இடத்திற்கு மாறும் சூரியன் சுயதொழில் புரிபவர்களுக்கு உரிய பெயர், பண வரவு இரண்டையும் ஈட்டித் தருவார். சுக்ரன் மே 11 முதல் 10 வீட்டில். சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம். கலைஞர்கள் தகுதிக்கு மீறிய செயல்பாடுகளிலிருந்தும், உறவுகளிடமிருந்தும் ஒதுங்கியிருப்பது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகாமல் பார்த்துக்கொண்டால், விரும்பியபடி வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

ஜூன்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 23, 24, 28.

சூரியன் முதல் 15 நாட்களுக்கு 11ம் இடத்தில் இருப்பதால், வியாபார விருத்தி நன்றாக இருக்கும். 12ம் தேதி முதல் செவ்வாயும் சூரியனோடு இணைவதால், பணியாளர்களின் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் தரும் முக்கிய பணிகளைத் திறம்பட செய்து முடிக்கும் வாய்ப்பு வந்து சேரும். பிறகு சூரியன் 12ம் இடத்திற்குப் போவதால் நண்பர்களால் தொல்லை நேரலாம். ஒட்டி உறவாடியவர்களின் போக்கிலும் விரும்பத்தகாத மாறுதலிருக்கும். ஜூன் 13 வரை 11ல் புதன். பெண்கள் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பிறகு 12, 1ம் வீடுகளுக்குப் போவதால், வியாபாரிகள் முன் பின் தெரியாதவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்காமலிருந்தால், நஷ்டப்பட வேண்டியிராது. 4ம் தேதி முதல் சுக்ரன் 11ம் வீட்டிற்கு செல்கிறார். வாழ்க்கைத் துணையோடு இணக்கமாக நடந்தால், சச்சரவு ஏதுமிராது. 6ம் தேதி முதல் ராகு பகவான் 8ம் வீட்டிற்கும் கேது பகவான் 2ம் வீட்டிற்கும் மாறுவதால், பண விவகாரங்களில் எவரையும் முழுமையாக நம்பி செயல்படுவதை அறவே தவிர்த்து விடவும். புதன் 1, 2 வீடுகளில் தங்குவதால், குடும்ப விஷயங்களில் பிறரின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொண்டால், திட்டமிட்டப்படி வேலைகள் �ராக நடைபெறும். பணியாளர்களின் போக்கில் தென்படும் மாறுதலை இதமாகச் சுட்டிக் காட்டினால், அவர்களின் ஆதரவு குறையாது. சுக்ரன் 4ம் தேதி முதல் 2ம் வீட்டில் தங்குவது போல், பிள்ளைகளின் பெருமையான செயல்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சூரியன் மாத முன் பகுதியில் 2ம் வீட்டில் இருப்பதால், பெண்கள் விளையாட்டாய் சொல்லும் வார்த்தையால் பிறர் மனம் புண்பட வாய்ப்பிருப்பதால் சொற்சிக்கனத்தை மேற்கொள்ளவும். 16ம் தேதி முதல் சூரியன் வெற்றியைத் தரும் 3ம் வீட்டுக்கு செல்வதால், பொறுப்பான பதவியில் இருப்பவர்களின் மனதில் இருந்த கலக்கமும், கவலையும் நீங்கி புதிய உற்சாகத்துடன் விளங்குவார்கள். செவ்வாய் 12ம் தேதி முதல் 2ம் இடத்தில் அமர்கிறார். நேரம் காலம் பாராமல் உழைப்பதால், சோர்வும், அயற்சியும் பெண்களின் நலனை குறைய செய்யும். 1 முதல் 13ம் தேதி புதன் முதல் 2ம் வீட்டில் நிற்பதால், மாணவர்கள் புலமைக்கான தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணும் பாராட்டுப்பத்திரமும் பெறுவது உறுதி. பிறகு அவர் 3ம், 4ம் வீடுகளில் அமர்வதால், உடன் பணிபுரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவர்.

ஜூலை

அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 15, 19, 20, 24, 28, 29.

15ம் தேதி வரை சூரியன் 3ல் பணியில் இருப்பவர்கள் தேங்கிக்கிடந்த பணியை உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள். பிறகு அவர் 4ம் இடம் போகிறார். இல்லத்தில் உருவாகும் சண்டைகள் வேதனையைக் கிளறும் விதமாக முடியும். எனவே பெண்கள் சொற்சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். 25ம் தேதி முதல் செவ்வாய் நலம் பல நல்கும் 3ம் வீட்டில் அமர்கிறார். மாணவர்களின் செயல்பாட்டில், நேர்த்தியும், திறமையும் பிரகாசிக்கும். புதன் 4, 5 வீடுகளில் சஞ்சரிப்பதால், நிர்பந்தத்தின் பேரில் சலுகைகளை பெற முயற்சிப்பவர்களிடம் வியாபாரிகள் எச்சரிக்கையாய் இருப்பது புத்திசாலித்தனம். பெருமையையும், மதிப்பையும் பெற்றுத் தரும் 3, 4 வீடுகளில் சஞ்சரிக்கும் சுக்ரன் உறவினர் வருகை, விருந்து, விழா என்று பெண்களை பரபரப்பாக செயல்பட வைப்பார். கலைகளில் ஆர்வம் உடையவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால், தொட்ட காரியம் யாவிலும் எளிதான வெற்றி கிடைக்கும்.

ஆகஸ்ட்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 24, 27, 28.

சூரியன் 4, 5 வீடுகளில் சுழல்வதால், வியாபாரிகளால் நிற்பதற்கு நேரமின்றி உழைக்க வேண்டியிருக்கும். எனினும் அவ்வப்போது ஆரோக்கியத்திலும் கவனம் வைப்பது நல்லது. செவ்வாய் இந்த மாதமும் 3ம் இடத்தில் இருப்பதால், இழுபறியாய் இருந்த பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். இந்த மாதம் 4ம் தேதி முதல் வக்ரம் பெறும் புதன் மீண்டும் 4ம் வீட்டுக்கு சென்று 27ம் தேதி வக்ர நிவர்த்தி பெறுகிறார். போட்டிகள் மூலம் தங்கள் திறமை வெளிப்படும் வரை மாணவர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் தொய்வு இல்லாமல் செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் ஏனோதானோவென்று செயல்படாமல், தகுந்த வழிகாட்டுதலுடன் செயல்பட்டால், எந்த உளைச்சலும் அருகே வராமலிருக்கும். சுக்ரன் பஞ்சம வீட்டுக்கு 17ம் தேதி முதல் போவதால், கலைஞர்களுக்கு பெருகும் வசதி வாய்ப்புகளால், உறவுக் கூட்டங்களின் வருகையும், கலகலப்பும் அதிகமாகும். பொது வாழ்வில் உள்ளவர்கள் திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் வெற்றியாகும்.

செப்டம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.

மாத முன் பகுதியில் சூரியன் 5ல். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பின் பகுதியில் சூரியன் 5ம் இடத்தில். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு லாபமும், நல்ல பெயரும் விருத்தியாகும். செப்டம்பர் 9ம் தேதி முதல் செவ்வாய் 4ல் நிற்பதால், உறவினர்களின் சச்சரவால், பெண்களின் மன அமைதி சற்றே பாதிக்கப்படும். வீடுகட்டுபவர்கள் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பாக வைத்தால், உங்கள் பணம் பாழாகாது. புதன் 21ம் தேதி வரை பஞ்சம ஸ்தானத்தில், கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வாத உணவு வகைகளை இனங்கண்டு தவிர்த்து விட்டால், மருத்துவச் செலவுகள் ஓரளவு குறைந்து விடும். 22ம் தேதி முதல் புதன் 6ல் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் அறிமுகமும், ஆதரவும் கிட்டும். 10ம் தேதி முதல் சுக்ரன் 6ம் இடத்திற்கு செல்கிறார். கலைஞர்கள் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கேற்ப தங்கள் வரவு செலவுகள் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், கடன் தொல்லைகள் இராது.

அக்டோபர்

அதிருஷ்ட நாட்கள்: 4, 6, 10, 13, 15, 19, 22, 24, 21.

சூரியன் 6, 7 வீடுகளைப் பங்குப்போட்டுக் கொள்வதால் முதல் 15 நாட்களுக்கு மாணவர்களுக்கு கடினமான வேலையையும் கச்சிதமாக முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஆனால் பிறகு சூரியன் 7ம் இடம் போவதால், வேண்டாத பிரச்சினைகளுக்காக மாணவர்கள் அங்கும் இங்கும் அல்லாட வேண்டி வரும். அக்டோபர் 30 முதல் செவ்வாய் பஞ்சம வீட்டிற்கு செல்கிறார். பெண்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தங்கள் செயல்பாட்டை செம்மையாக்கிக்கொள்வது நல்லது. புதன் 9ம் தேதியிலிருந்து 7ம் இடத்திற்கு மாறுகிறார். பங்குதாரர்களால் சில மனச் சங்கடம் தோன்றி மறையும். 29ம் தேதி முதல் புதன் அஷ்டம வீட்டுக்கு போகிறார். பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து நடந்துகொள்வார்கள். 4ம் தேதி முதல் 27ம் தேதி வரை சுக்ரன் 7ம் இடத்தில். கலைஞர்கள் படாடோபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே! பிறகு சுக்ரனும் அஷ்டம வீட்டுக்குப் போவதால், சுய தொழில் புரிபவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

நவம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 28.

சூரியன் இந்த மாதம் 7, 8 வீடுகளைக் கடந்து போவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குடும்பத்தில் சச்சரவு உருவாகும் நேரங்களில் பெண்கள் சொல்சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், பிரச்சினைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்து விடும். செவ்வாய் இந்த மாதமும் பஞ்சம வீட்டில் உள்ளதால், முதியவர்கள் ரத்த சோகைக்குரிய அறிகுறி தெரிந்தாலே, அதற்குரிய மருந்துகளை உட்கொண்டு விட்டால், மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். அஷ்டம வீட்டில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் பெறுவதால், பெற்றோர்களுக்கு பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்புக்கான உதவியும், ஒத்தாசையும் தக்க சமயத்தில் கிடைக்கும். வெளி உறவுகளில் சுமூகமான சூழல் நிலவிட 21ம் தேதி முதல் 9ம் வீட்டில் நிற்கும் சுக்ரன் துணையாய் இருப்பார். சனி 14ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு செல்கிறார். கலைஞர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது.

டிசம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 28, 30.

சூரியன் 8, 9 வீடுகளில் தவழ்வதால், வேலையில் இருப்பவர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். இந்த மாதமும் செவ்வாய் பஞ்சம வீட்டில் நிற்கிறார். பணியில் இருப்பவர்கள் சகஊழியர்களின் விஷயங்களைப் பற்றி அலசல்களில் பங்கேற்காமல் விலகியிருப்பது அவசியம். மாணவர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். அஷ்டம வீட்டிலிருக்கும் புதன் 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறுகிறார். வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு நிம்மதி தரும் விதமாக அமையும். சுக்ரன் 16ம் தேதி முதல் 10ம் வீட்டுக்குப் போகிறார். படபடப்பு, முன்கோபம் இரண்டிற்கும் இடம் தராமல் பெண்களின், உரையாடல் இருந்தால், அவர்கள் கருத்தை பிறர் எளிதில் ஆமோதிப்பர். சுய தொழில் புரிபவர்கள் பகல் கனவை நம்புவதை விட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் பேச்சில் உள்ள முதிர்ச்சி செயலிலும் இருக்கும் வண்ணம் நடந்துகொண்டால், ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும். கலைஞர்கள் வெளிவட்டார பழக்கங்களில் அளவாக இருப்பதை கடைபிடித்தால், வேதனைகள் உங்கள் அருகே வராது.

Site Meter