சாக்கடையாய்ப் போனது அரசியல் மட்டுமல்ல - சமூகமும் தான்.

Change starts from us. Be the change that you wish to see in the world. - Tamil Poltics News Article

படித்ததில் பிடித்தது.

மக்களாட்சி என்பது அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.

டாஸ்மார்க் மூடச் சொல்லிப் பிரச்சாரம் செய்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் மது அருந்துவதில்லை?

பொய் வாக்குறுதிகள் தந்து பித்தலாட்டம் ஆடுவதாய் அரசியல்வாதிகளைச் சாடுகிறோம்?
நம்மில் எத்தனை பேர் பொய் பேசுவதில்லை?

சொத்துகுவித்துவிட்டதாய் புலம்புகிறோம்.
நம்மில் எத்தனை பேர் தங்கம் விரும்புவதில்லை.வீட்டுமனைகள் ஒன்றுக்கு மேல் வாங்கவில்லை?

லஞ்சம் ஊழல் என்று குமுறுகிறோம்.
நம்மில் எத்தனை பேர் லஞ்சம் கொடுப்பதில்லை?

இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறோம்.
நம்மில் எத்தனை பேர் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை?

சாதி அரசியல் குறித்து விமர்சிக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் சாதி மறுத்து வாழ்கிறோம்?

சமூகமாற்றம் என்று வாய் கிழிய பேசுகிறோம். ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்து கொள்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துள்ளோம், இயலாதவர்காகத்  தியாகம் செய்துள்ளோம்?

அரசியல்வாதிகளை நம்பிக்கை துரோகிகள் என்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் நம்மிடம் அன்பு செய்தவர்கள் நம்பிக்கையைக் குலைத்ததில்லை?

சாக்கடையாய்ப் போனது அரசியல் மட்டுமல்ல - சமூகமும் தான்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும்,  முதலில் மாறுவோம்,  பிறகு மாற்றுவோம்.

Site Meter