வெள்ளிக்கிழமை மே, 22, 2015 - Friday, May 22, 2015

Movie Review  

I - Tamil Movie Review
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ஐ. பட்ஜெட் பெருசு, கதை சிறுசு....
மேலும் (more)  
Snehavin Kadhalargal - Tamil Movie Review
வெறும் அறுபது லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சியப் கதையை தர முயற்சித்திருக்கிறார் முத்துராமலிங்கன். முதல் முயற்சி. வரவேற்போம்!...
மேலும் (more)  
Aintham Thalaimurai Siddha Vaidhiya Sigamani - Tamil Movie Review
கோர்வையான திரைக்கதை மூலம் நடத்திச் சென்றிருந்தால், சபாஷ்மணி ஆகியிருப்பான், சிகாமணி....
மேலும் (more)  
Thirumanam Ennum Nikkah - Tamil Movie Review
ரயில் பயணத்தின்போது ஏற்படும் காதல் கதை....
மேலும் (more)  

 ஒப்புரவறிதல்

திருக்குறள் - Thirukkural

  
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
- (குறள் : 213)

பிறருக்கு உதவி செய்து வாழ்தலான ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப் பகுதிகளை இவ்வுலகத்தலும் வான் உலகத்திலும் பெறுதல் அரிது.


வரலாற்றில் இன்று

Today in History  

மே
22
 • World Biodiversity Day
 • யேமன் - தேசிய நாள்
 • இலங்கை - தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972)
 • கிமு 334 - மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.
 • 1809 - வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
 • 1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
 • 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
 • 1844 - பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
 • 1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
 • 1927 - சீனாவின் Xining என்ற பகுதியை தாக்கிய நிலநடுக்கம் சுமார் 2 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.
 • 1915 - ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
 • 1942 - இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
 • 1958- இலங்கை இனக்கலவரம் - இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 1960 - தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
 • 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது. சிங்கள பௌத்தக் குடியரசாக இலங்கை அரசியல் சாசனம் மாற்றம்
 • 1990 - வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
 • 1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
 • 2001 - ஷெர்பா இனத்தைச் சேர்ந்த இளைஞர் டெம்போ ஹேரி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டைத் தொட்டவர் என்ற பெருமையை பெற்றார்.
Site Meter